சமையலறை

பிரக்கோலி சூப்

ப்ரதிமா

தினமும் ஒரே மாதிரி சாப்பிட்டுச் சிலருக்கு அலுத்துவிடும் என்றால், ஒவ்வொரு நாளும் புதுமையாக எதைச் சமைப்பது என சமைக்கிறவர்களுக்கு வெறுத்துவிடும். கொஞ்சம் மெனக்கெட்டால் தினம் தினம் புது விருந்து படைக்கலாம் என்கிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி. எளிதாகக் கிடைக்கிற பொருட்களில் அசத்தலாகச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.

பிரக்கோலி சூப்

பாதாம் - 10, பிரக்கோலி துண்டுகள் - 1 கப், வெங்காயம் - 2, வெண்ணெய் - 1 டீஸ்பூன், பால் - 2 கப், உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கேற்ப, குங்குமப்பூ - 2 சிட்டிகை

பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோல் உரித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாக நறுக்கிச் சூடான நீரில் போட்டுப் பத்து நிமிடம் மூடிவையுங்கள். பின்னர், தண்ணீரை வடித்து தோல் நீக்கி வைத்துள்ள பாதாம் பருப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் விட்டு பிரக்கோலி துண்டுகளைப் போட்டுச் சிறிது நேரம் வதக்குங்கள்.

லேசாக வதங்கிய பின்பு பால் சேர்த்துச் சிறு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதைச் சேர்த்துக் கெட்டியான பதம் வந்ததும் ஒரு கொதிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்துச் சூடாகப் பரிமாறுங்கள். விரும்பினால் குங்குமப்பூவைத் தூவி அலங்கரிக்கலாம்.

SCROLL FOR NEXT