சமையலறை

பாப்கார்ன் சாதம்

ஆர்.செளந்தர்

என்னென்ன தேவை?

பாப்கார்ன் - 100 கிராம்

வெங்காயம், தக்காளி - தலா 2

வடித்த சாதம் - 4 கப்

புதினா, கொத்தமல்லி - தலா 1 கப்

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

மிளகாய்ப் பொடி - 3 டீஸ்பூன்

தனியா பொடி, மிளகு பொடி - தலா 1 டீஸ்பூன்

கடுகு, உளுந்து - தாளிக்க

எண்ணெய், உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

பாப்கார்னை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். புதினாவையும் கொத்தமல்லியையும் விழுதாக அரைத்துக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகாய்ப் பொடி, மிளகுப்பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு பாப்கார்ன் பொடி, தேவையான உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும். ஆறியதும் வடித்த சாதத்தில் இந்தக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பாப்கார்னில் இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் உண்டு. வித்தியாசமான இந்த சாதத்தைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

SCROLL FOR NEXT