என்னென்ன தேவை?
காலா மீன் - 4
காய்ந்த மிளகாய் - 12
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப் பல் - 8
தயிர் - 1 குழிக் கரண்டி
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, நெய் அல்லது நல்லெண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காலா மீனின் வயிற்றுப் பகுதியைக் கிழித்து, சுத்தம் செய்து அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள முள்ளையும் எடுத்துவிடுங்கள். முள்ளைக் கையால் எடுத்தாலே எளிதாக வந்துவிடும். மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த கலவையுடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மறுபடியும் அரைத்துக்கொள்ளுங்கள்.
இந்தக் கலவையை மீனின் இரு புறங்களிலும் நன்றாகத் தடவி வெயிலில் ஒரு மணி நேரம் வையுங்கள். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு மீனாகப் போட்டு குறைந்த தீயில் வறுத்தெடுங்கள். மீனை வறுக்கும்போது கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்தால் சுவையாக இருக்கும்.