சமையலறை

வாழைப்பூ சமையல்: அடை

ப்ரதிமா

என்னென்ன தேவை?

வாழைப்பூ (நறுக்கியது) – 1 கப்

குதிரைவாலி அரிசி, புழுங்கல் அரிசி – தலா  1 கப்

கடலைப் பருப்பு – 1 கப்

உளுந்து, பாசிப் பருப்பு – தலா அரை கப்

மிளகாய் வற்றல் – 10

தேங்காய்த் துருவல் – அரை கப்

பெருங்காயம் – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 2

சோம்பு – 1 டீஸ்பூன்

உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிது

எப்படிச் செய்வது?

பருப்பையும் அரிசி வகைகளையும் ஊறவைத்து அவற்றுடன் உப்பு, மிளகாய், தேங்காய்த் துருவல், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, வேகவைத்த வாழைப்பூ ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள். இவற்றை மாவில் சேர்த்துக் கலக்கி, அடையாக ஊற்றுங்கள். சுற்றிலும் தேங்காய் எண்ணெய் ஊற்றித் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.

SCROLL FOR NEXT