சமையலறை

வாழைப்பூ சமையல்: கீர்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பாதாம் பருப்பு – 20

வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) – 1 கப்

பால் – 2 கப்

சர்க்கரை – 3 கப்

துருவிய  பாதாம் – 1 டீஸ்பூன்

கேசரி பவுடர் – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். வாழைப்பூவை  அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்துச் சாறெடுத்துக்கொள்ளுங்கள்.  அடி கனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வையுங்கள். சர்க்கரை கரைந்ததும் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுது, வாழைப்பூ சாறு, கேசரி பவுடர் ஆகியவற்றைக் கலந்து, பாலைக் கொதிக்கவிடுங்கள். கீர் அடர்த்தியாகவோ நீர்க்கவோ இல்லாமல் கொழகொழப்பான பதத்தில் இருக்க வேண்டும்.  பாதாம் பருப்பை மேலே தூவி அலங்கரித்து, குளிரவைத்தோ சூடாகவோ குடிக்கலாம்.

SCROLL FOR NEXT