சமையலறை

சகுந்தலா தயிர்ப் பச்சடி

ப்ரதிமா

வெண்டைக்காய் மூளைக்கு நல்லது என்பதால் நவராத்திரி சமயத்தில் கணித மேதை சகுந்தலாதேவிக்குச் சிறப்பு சேர்க்கும் விதத்தில் இந்தத் தயிர்ப் பச்சடியைச் செய்து, நிவேதனம் செய்யலாம்.

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - கால் கிலோ

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறு துண்டு

சோளமாவு - 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தயிர் - 1 ஆழாக்கு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

கொத்தமல்லி - சிறிதளவு

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயைக் கழுவிச் சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு இவற்றை விழுதாக அரைத்து, சோளமாவு கலந்து வெண்டைக்காயில் சேர்த்துப் பிசையவும். இதைச் சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். தயிரில் அளவாக உப்புப் போட்டுக் கலந்து அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். பொரித்த வெண்டைக்காயைச் சேர்த்து, கொத்தமல்லி தூவவும்.

குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்

SCROLL FOR NEXT