என்னென்ன தேவை?
பச்சரிசி - அரை கிலோ
பாசிப்பருப்பு - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 2
முந்திரி, திராட்சை - சிறிதளவு
நெய் - 1 டீஸ்பூன்
வெல்லம் அல்லது
சர்க்கரை - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசியையும், பாசிப் பருப்பையும் ஒன்றாக வேகவிடவும். பாதியளவு வெந்ததும் முக்கால் கிலோ சர்க்கரை அல்லது அரை கிலோ வெல்லம் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.