என்னென்ன தேவை?
மைதா – 1 கப்
ரவை, சர்க்கரை – தலா அரை கப்
பால் – 1 கப்
நெய் – கால் கப்
சீவிய பாதாம் – 4 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ரவையை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பால் சேர்த்துக் கிளறுங்கள். சர்க்கரையையும் 4 டீஸ்பூன் நெய்யையும் கலந்து கிளறுங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.
மைதாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி, மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டுங்கள். உள்ளே ரவை உருணையை வைத்து மூடி மீண்டும் திரட்டுங்கள். இதைச் சூடான தவாவில் போட்டு இருபுறமும் நெய் விட்டுச் சுட்டெடுங்கள். நான்கு துண்டுகளாக வெட்டுங்கள். ஒவ்வொரு துண்டின் மீதும் சிறிது மில்க் மெய்டையும் சீவிய பாதாமையும் வையுங்கள். சூடான பாலில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, பராத்தா மீது ஊற்றிப் பரிமாறுங்கள்.தொகுப்பு: ப்ரதிமாதலைவாழை