சமையலறை

குளிர்ச்சி தரும் உணவு: விளாம்பழ மணப்பாகு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

விளாம்பழம் - ஒன்று

நாட்டுச் சர்க்கரை - கால் கப்

தேன் - கால் கப்

எப்படிச் செய்வது?

விளாம்பழத்தை ஓடு நீக்கி உள்ளே இருக்கும் சதைப் பகுதியைத் தனியாக எடுங்கள். அதனுடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளுங்கள். அதில் ஆறு டம்ளர் குளிர்ந்த நீரையும் கால் கப் தேனையும் சேர்த்துக் கலந்து வடிகட்டுங்கள். இந்த மணப்பாகு, உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

- தொகுப்பு: வி.சீனிவாசன்

samayaljpgகுறிப்பு: அம்பிகா 

SCROLL FOR NEXT