என்னென்ன தேவை?
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – அரை கப்
பொடித்த வெல்லம் – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
எண்ணெய் – தேவைக்கு
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது ?
பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு அவற்றுடன் வெல்லம், தேங்காய் இரண்டையும் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை போண்டாபோல் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.