சமையலறை

குளிர்ச்சி தரும் உணவு: கிழங்கு வடை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மரவள்ளிக் கிழங்கு (துருவியது) - ஒரு கப்

துவரம் பருப்பு - கால் கப்

அரிசி – கால் கப்

சின்ன வெங்காயம் – சிறிதளவு

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா இரண்டு

சீரகம் - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - இரண்டு சிட்டிகை

எப்படிச் செய்வது?

பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியாக ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் அரிசியுடன் காய்ந்த மிளகாயையும் சீரகத்தையும் சேர்த்து அரையுங்கள். பருப்பைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். மரவள்ளிக் கிழங்குத் துருவலையும் தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த மாவுக் கலவைகளை ஒன்றாகச் சேர்த்துப் பிசையுங்கள். நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மாவில் சேர்த்துப் பிசையுங்கள். மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். இதை மாலை நேரச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.

- தொகுப்பு: வி.சீனிவாசன்

samayaljpgகுறிப்பு: அம்பிகா 

SCROLL FOR NEXT