என்னென்ன தேவை?
அரிசி, வெல்லம் – தலா 1 கப்
நெய் – கால் கப்
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் – 4 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசியை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு மாவாகப் பொடித்து, சலித்துக்கொள்ளுங்கள். வெல்லத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வையுங்கள். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வையுங்கள். தளதளவெனக் கொதிக்கும்போது அரிசி மாவைக் கொட்டிக் கிளறுங்கள். நெய், தேங்காய்த் துண்டுகள் இரண்டையும் சேர்த்துக் கிளறுங்கள். கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்புங்கள். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள். கர்நாடகத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளின்போது இதைச் செய்வார்கள்.