என்னென்ன தேவை?
சிவக்க வறுத்த அரிசி மாவு – 2 கப்
வேகவைத்த காராமணி – 6 டீஸ்பூன்
தேங்காய்ச் சில்லு - அரை கப்
பொடித்த வெல்லம் - 3 கப்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெல்லத்தில் மூன்று கப் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். அதில் தேங்காய்ச் சில்லு, ஏலக்காய்ப் பொடி, வேகவைத்த காராமணி, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நெய்விட்டுச் சுருளக் கிளறி ஆறவையுங்கள். ஆறியதும் நன்றாகப் பிசைந்து வடைபோல் தட்டி நடுவில் துளையிட்டு இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு எடுங்கள். வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட ருசியாய் இருக்கும்.