சமையலறை

அசத்தலான அமெரிக்க உணவு: ஃபஜீதாஸ் வித் டாடில்லா

ப்ரதிமா

என்னென்ன தேவை?

மெலிதாக அரிந்த பச்சை, மஞ்சள், சிவப்புக் குடைமிளகாய் – 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்

எலுமிச்சைச் சாறு – 3 டேபிள் ஸ்பூன்

பனீர் துண்டுகள் – அரை கப்

ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் – அரை கப்

மல்லித் தழை - 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 1

பூண்டுப் பற்கள் - 1 டேபிள் ஸ்பூன்

பாப்ரிகா - 3 டேபிள் ஸ்பூன்

சில்லி ஃபிளேக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயத் தாளையும் குடைமிளகாய்த் துண்டுகளையும் சேர்த்து வதக்குங்கள். பனீர் துண்டுகள், தக்காளி, பாப்ரிகா ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி மல்லித் தழையைத் தூவி இறக்கிவையுங்கள். எலுமிச்சைச் சாறு பிழிந்து அனைத்தையும் சேர்த்துக் கலந்தால் ஃபஜீதாஸ் தயார்.

rajakumarijpgகுறிப்பு: ராஜகுமாரிright

டாட்டிலா செய்யத் தேவையானவை:

கோதுமை மாவு – ஒன்றரை கப்

மைதா மாவு – அரை கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து வெதுவெதுப்பான நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையுங்கள். அதன் மேல் ஈரத் துணியைப் போட்டு 20 நிமிடம் வையுங்கள். மாவைச் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாக உருட்டுங்கள். மேலே ஒரு துணியைப் போட்டுக் கைகளால் மென்மையாக அழுத்திவிட்டுத் தவாவில் குறைந்த தணலில் போட்டு எடுத்தால் டாட்டிலா தயார். டாட்டிலாவின் ஒரு பகுதியில் ஃபஜீதாஸ் வைத்து மறுபுறம் ஏதாவது ஒரு சோர் க்ரீம் வைத்துச் சுவைக்கலாம். அல்லது டாட்டிலாவின் உள்ளே ஃபஜீதாஸை வைத்துச் சுருட்டி, லவங்கத்தைக் குத்தியும் சாப்பிடலாம்.

செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்

SCROLL FOR NEXT