சமையலறை

ஆட்டு ஈரல் வறுவல்

செய்திப்பிரிவு

தேவையானவை:

ஆட்டு ஈரல் - அரை கிலோ

கறிமசாலாப்பட்டை - 1

சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிமசாலப்பட்டையில் உள்ள அனைத்தையும் போட்டு தாளிக்கவும். பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் விரைவில் வதங்குவதற்காக சிறிது உப்பு சேர்க்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர், இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அதனுடன், குழம்பு மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கவும்.

* இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டு ஈரலைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். பின்னர், ஈரல் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஸ்டவ்வை சிம்மில் வைத்து, மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

* 10 நிமிடங்கள் கழித்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். அதன்மேல் கொத்தமல்லித்தழையை தூவவும்.

வெங்காயம் அதிகமாகச் சேர்த்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடும் தொக்கு போல் கிடைக்கும். தொக்கு வேண்டாம் என்றால், வெங்காயம் குறைவாகச் சேர்த்துக் கொள்ளவும்.

இதன் செய்முறை வீடியோ இதோ...

SCROLL FOR NEXT