என்னென்ன தேவை?
சோள மாவு – 1 கப்
துருவிய வெங்காயம் – 2
இஞ்சித் துருவல் – சிறிது
மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பொடித்த ஓமம் – ஒரு சிட்டிகை
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வெந்நீர் – 2 கப்
மைதா – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது ?
வெந்நீரைத் தவிர மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பிறகு வெந்நீர்விட்டு நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். சாத்துக்குடி அளவுக்கு மாவு எடுத்து சப்பாத்தி இடும் கல்லில் கையாலேயே பரத்தா போலத் திரட்டிக்கொள்ளுங்கள். சப்பாத்திக் கட்டையால் தேய்க்கக் கூடாது.
தவா சூடானதும் பராத்தாவைப் போட்டு, சிறிய ஈரத் துணியால் அழுத்திவிடுங்கள். ஒருபுறம் வெந்தபின் மற்றொருபுறம் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.