சமையலறை

தேர்வு நேரச் சத்துணவு: செம்பருத்தி மில்க் ஷேக்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

செம்பருத்தி – 10

பால் – 2 கப்

ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்

தேன் – 2 டீஸ்பூன்

பிஸ்தா – 4

எப்படிச் செய்வது?

செம்பருத்தி இதழ்களைச்  சுத்தம் செய்து அவற்றை அரை கப் பாலில் போட்டுக் கொதிக்கவிடுங்கள். பால் நன்றாகக் கொதித்ததும் இறக்கிவைத்து மூடிவையுங்கள். பால் ஆறியதும் வடிகட்டி அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், தேன், ஏலக்காய்த் தூள், பொடியாக நறுக்கிய பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளுங்கள். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறுங்கள். படிக்கும் மாணவர்களுக்கு உடனடி சக்தியைத் தரக்கூடியது இந்தச் செம்பருத்தி மில்க் ஷேக்.

செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்

SCROLL FOR NEXT