என்னென்ன செய்வது?
பாசிப் பருப்பு – அரை கப்
வெல்லம் – அரை கப்
ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்
பால் – அரை லிட்டர்
முந்திரி, திராட்சை – 2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பருப்பு வெந்ததும் வெல்லப் பாகில் கொட்டிக் கலந்துகொள்ளுங்கள். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை இரண்டையும் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவுங்கள். காய்ச்சிய பாலைச் சேர்த்துப் பரிமாறுங்கள்.