என்னென்ன தேவை?
பாகற்காய்த் துண்டுகள் – 2 கப்
துவரம் பருப்பு – கால் கப்
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
கறிப்பிலை – ஒரு கொத்து
எப்படிச் செய்வது?
துவரம் பருப்புடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகையும் பெருங்காயத் தூளையும் போட்டுத் தாளித்து, பாகற்காய்த் துண்டுகளைப் போடுங்கள். அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பாகற்காய் வெந்ததும் புளிக் கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து, சூடு ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதை கொதிக்கும் பாகற்காய்க் கலவையுடன் சேருங்கள். வேகவைத்த பருப்புக் கலவையையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் கறிவேப்பிலையைத் தூவிப் பரிமாறுங்கள்.