சமையலறை

சிறுதானிய உணவு: பணியாரம்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

சோளம், புழுங்கல் அரிசி – தலா அரை கப்

உளுத்தம் பருப்பு – கால் கப்

வெந்தயம் -1 டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த கெட்டி அவல் – 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

நறுக்கிய தேங்காய்ப் பல் – கால் கப்

பச்சை மிளகாய் – 3

வெங்காயம் – 1

சோம்பு – சிறிதளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

நெய், எண்ணெய் இரண்டும் சேர்த்து – 100 கிராம்

உப்பு – தேவைக்கு

கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் – தாளிக்க

எப்படிச் செய்வது?

சோளம், புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவு புளித்ததும் அதனுடன் பொடித்த அவல், தேங்காய்ப் பல், வெங்காயம், உப்பு, சோம்பு, உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.  தாளிக்கக் கொடுத்தவற்றைச் சிறிதளவு எண்ணெய் ஊற்றித் தாளித்து மாவில் கொட்டிக் கலக்குங்கள். குழிப்பணியாரக் கல்லில் நெய் - எண்ணெய்க் கலவையைத் தடவி அரைக் கரண்டி மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு  வேகவிட்டு எடுங்கள்.

SCROLL FOR NEXT