சமையலறை

பழைய காய், புது உணவு: பசு மஞ்சள் புலவ்   

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - 1 கப்

பச்சை மஞ்சள்-1 துண்டு (ஒரு விரல் நீளத்துக்கு)

தேங்காய்த் துருவல் – அரை மூடி

இஞ்சி - பூண்டு கலவை - 1 டீஸ்பூன்

பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்

நெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியைக் கழுவிப் பத்து நிமிடம் ஊறவையுங்கள். தேங்காய்த் துருவலோடு பச்சை மஞ்சள் சேர்த்து அரைத்துப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். குக்கரில் நெய் ஊற்றிப் பட்டை, கிராம்பு, இஞ்சி - பூண்டு கலவை சேர்த்துத் தாளியுங்கள். ஊறவைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்துக் கிளறுங்கள். முக்கால் கப் தண்ணீர், முக்கால் கப் பால் கலவையைச் சேருங்கள். பனங்கற்கண்டு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கிவிடுங்கள். வெங்காயத்தை எண்ணெய்யில் முறுகலாக வறுத்து மேலே தூவிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT