சமையலறை

கமகமக்கும் காய்கறி விருந்து: பரங்கிக்காய் கீர்

ப்ரதிமா

நாம் அன்றாடச் சமையலுக்குப் பயன்படுத்தும் பரங்கிக்காய், சேனை, பீட்ரூட் போன்ற காய்கறிகளில் வித்தியாசமான உணவு வகைகளைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உஷா.

பரங்கிக்காய் கீர்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் – 200 கிராம்

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – ஐந்து டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 8

நெய் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பரங்கிக்காயைத் தோல்சீவி நறுக்கி வேகவிட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். அரை லிட்டர் பாலை நன்றாகக் காய்ச்சி அதில் மசித்து வைத்துள்ள பரங்கிக்காயைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு அதில் சர்க்கரை சேர்த்து மீதமுள்ள அரை லிட்டர் பாலைச் சுண்டக்காய்ச்சி பரங்கிக்காய்யுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். இப்போது நெய்யில் முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து, பிறகு ஏலக்காய்ப் பொடியைத் தூவினால் சுவையான பரங்கிக்காய் கீர் தயார்.

SCROLL FOR NEXT