சமையலறை

ருசிக்கத் தூண்டும் பூசணி: இனிப்பு

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பூசணித் துண்டுகள் – 2 கப்

சர்க்கரை – 1 கப்

ஏலக்காய் – 2

குங்குமப்பூ- சிறிதளவு

எலுமிச்சைச் சாறு – முக்கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பூசணிக்காயை விதைகள் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பூசணித் துண்டுகளை அலசி, முள் கரண்டியால் சதைபாகத்தைத் துளைகள் போட்டுப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்தெடுத்து ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

வாணலியில் சர்க்ரையைப் போட்டு, சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்து தேன் போன்ற பதம் வந்ததும் ஏலக்காய், குங்குமப்பூ இரண்டையும் சேருங்கள். பின்னர் வேகவைத்துள்ள பூசணித் துண்டுகளை பாகில் போட்டு ஊறவிட்டு எடுத்தால் சத்தான பூசணிக்காய் இனிப்பு தயார்.

SCROLL FOR NEXT