என்னென்ன தேவை?
பரங்கிக்காய்த் துண்டுகள் - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
வெல்லப் பாகு - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எப்படிச் செய்வது?
பரங்கிக்காயை உப்பு, தண்ணீர் சேர்த்து கடாயில் வேகவையுங்கள். வெந்தவுடன், வெல்லப்பாகு சேர்த்துக் கொதிக்கவிட்டு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துச் சேருங்கள். தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.