சமையலறை

பொங்கல் படையல்: பாசிப் பருப்பு தேங்காய்ப் பாயசம்

ப்ரதிமா

என்னென்ன தேவை ?

பாசிப் பருப்பு - 1 கப்

வெல்லம் - 1 கப்

காய்ச்சி ஆறவைத்த பால் - 4 கப்

மெலிதாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் – அரை கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்

முந்திரி, திராட்சை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

தேங்காய்த் துண்டுகளை

வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துத் தனியே வையுங்கள். வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி வையுங்கள். பாசிப் பருப்பை வெறும் வாணலியில் குறைந்த தீயில் பொன்னிறமாக வறுத்து, வேகவைத்துக்கொள்ளுங்கள். வெந்த பருப்பை நன்றாகக் குழைத்து, பால் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் வெல்லப் பாகு சேர்த்துக் கிளறுங்கள். அரைத்த தேங்காய்,

வறுத்த தேங்காய்த் துண்டுகள் இரண்டையும் சேருங்கள். நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, சூடாகவோ ஆறவைத்தோ பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT