சமையலறை

ருசிக்கத் தூண்டும் பூசணி: புளிக் கூட்டு

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பூசணித் துண்டுகள் – 2 கப்

தக்காளி (பெரியது) - 2

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்

புளிக் கரைசல்

– சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி

– சிறிதளவு

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவைக்கு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். அதில் தாக்காளியைப் போட்டு வதக்கி, பூசணித் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள். பூசணிக்காய் வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். காய்கள் வெந்து, குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டையும் தூவி இறக்குங்கள்.

SCROLL FOR NEXT