சமையலறை

கன்யா வடை

ப்ரதிமா

நவராத்திரி கன்யா குழந்தைகளுக்கு மிகவும் விசேஷம். அதனால் குழந்தைகள் மிகவும் விரும்பும் இந்த வடையைச் செய்து நிவேதனம் செய்யலாம். விரதம் இல்லாத நாட்களில் இந்த வடையில் வெங்காயம் சேர்க்கலாம்.

என்னென்ன தேவை?

வெள்ளை கொண்டைக்கடலை

- 1 கப்

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறு துண்டு

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 1 கரண்டி

தனியா, சீரகம் - தலா 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு

- தேவையான அளவு

கொத்த மல்லி, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது)

- தலா 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, தனியா, சீரகம், பெருங்காயம் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.

இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பிசையவும். பிறகு தேங்காய்த் துண்டுகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மசால்வடை போல தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்

SCROLL FOR NEXT