சமையலறை

ருசிக்கத் தூண்டும் பூசணி: துக்கடா

ப்ரதிமா

என்னென்ன தேவை?

தோல்நீக்கிய பூசணித் துண்டுகள் – 2 கப்

பச்சை மிளகாய் – 4

துவரம் பருப்பு – கால் கப்

கடலைப் பருப்பு – கால் கப்

உளுத்தம் பருப்பு – கால் கப்

அரிசி – அரை கப்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

எப்படிச் செய்வது?

துவரை, கடலை, உளுந்து, அரிசி ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பூசணித் துண்டுகளுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்துத் தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளுங்கள். ஊறவைத்துள்ள அரசி - பருப்புக் கலவையைத் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள பூசணி விழுதைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி மாவை எடுத்துவிடுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி, மாவில் கலந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் மாவைச் சிறு உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்துதெடுங்கள்.

SCROLL FOR NEXT