சமையலறை

மசால் தோரன்

என்.முருகவேல்

என்னென்ன தேவை?

மைதா மாவு - கால் கிலோ

வெங்காயம் - அரை கிலோ

தேங்காய் - 1

தேங்காய் எண்ணெய் - 250 மி.லி

மசாலா தூள்,

மஞ்சள் பொடி - சிறிதளவு

பூண்டு, சீரகம்,

மிளகுப் பொடி, உப்பு,

கறிவேப்பிலை, கடுகு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிசைந்த மாவை உருட்டி பரோட்டா அளவுக்குத் தேய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அதைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் பொடி, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் மைதா ரொட்டியைப் போட்டுக் கிளறவும். மிளகாய்த் தூள், மசாலா தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கிவைக்கவும்.

குறிப்பு: லீனா தம்பி

SCROLL FOR NEXT