சமையலறை

சௌசௌ பலகாரம்: அல்வா

ப்ரதிமா

பொதுவாக நீர்க் காய்கள் என்றால் சிலருக்குப் பிடிக்காது. போனால் போகிறதென்று சாம்பாரிலோ கூட்டிலோ மட்டும் அவற்றுக்கு இடம் தருவார்கள். “சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படாத காய்களில் ஒன்று சௌசௌ எனச் சிலர் சொல்லக்கூடும். ஆனால், இதிலும் அல்வா, சாப்ஸ், பக்கோடா போன்றவற்றைச் செய்யலாம்” என்கிறார் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. சௌசௌவில் செய்யக்கூடிய சில உணவு வகைகளின் செய்முறையை நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.

அல்வா

என்னென்ன தேவை?

சௌசௌ – 1

சர்க்கரை – 2 கப்

கலர் – ஒரு சிட்டிகை

முந்திரி – 10

நெய் – 1 கப்

எப்படிச் செய்வது?

சௌசௌவைத் தோல் நீக்கித் துருவிக்கொள்ளுங்கள். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையைப் போடுங்கள். சர்க்கரை நன்கு கரைந்ததும் துருவிவைத்துள்ள சௌசௌ, கலர் பொடி, நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகச் சுருளக் கிளறுங்கள். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து இறக்கிவையுங்கள்.

SCROLL FOR NEXT