என்னென்ன தேவை?
நிறைய கொழுப்புள்ள பால் - ஒரு லிட்டர்
எலுமிச்சைப் பழச்சாறு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 200 கிராம்
தண்ணீர் - 500 மி.லி.
எப்படிச் செய்வது?
பாலை நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கொதித்து வரும்போது இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு ஊற்றி நன்றாகக் கலக்குங்கள். பால் திரிந்துவந்தவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். பின்னர் சுத்தமான பருத்தித் துணியில் பாலை வடிகட்டுங்கள். வடிகட்டியதில் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை வாசனை போகும்வரை கழுவி மீண்டும் வடிகட்ட வேண்டும். தண்ணீரே இல்லாமல் நன்கு பிழிந்துகொள்ளுங்கள். இப்போது கெட்டியான பனீர் ரெடி. இதை நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடுங்கள். அதில் பனீர் உருண்டைகளைச் சேர்த்துச் சிறிது நேரம் மூடிவைத்து வேகவிடுங்கள். ஆறியதும் பரிமாறுங்கள்.