சமையலறை

அலங்கரித்துச் சாப்பிடலாம்! - ஆப்பிள் பூந்தொட்டி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

ஆப்பிள், கிவிப் பழம், வாழைப்பழம், சப்போட்டா – தலா ஒன்று

கறுப்புத் திராட்சை, மாதுளை முத்துக்கள் – சிறிது

ஃபிரெஷ் கிரீம் – கால் கப்

டூத் பிக் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஆப்பிளை இரண்டு சமமான துண்டுகளாக வெட்டி விதைநீக்குங்கள். சிறிய ஸ்பூனால் கூடை மாதிரி குடைந்துகொள்ளுங்கள். அதனுள் குடைந்த ஆப்பிள் விழுது, கறுப்புத் திராட்சை, மாதுளை முத்துக்கள், ஃபிரெஷ் கிரீம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிரப்புங்கள். கிவியையும் சப்போட்டாவையும் வட்டமாக நறுக்கிக்கொள்ளுங்கள். வட்டத்தின் நடுவே சிறுதுளை போட்டுத் தோல்நீக்கி, அரிந்த வாழைப்பழத் துண்டை அதனுள் வையுங்கள். டூத்பிக்கைத் தனித்தனியே  கிவி, சப்போட்டாவின் கீழ் செருகி ஆப்பிள் கூடையில் செருகுங்கள். மிக்ஸ்டு ஃபுரூட் கூடை தயார். அப்படியே சுவைக்க வேண்டியதுதான்.

SCROLL FOR NEXT