சமையலறை

தெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - கெட்டி உருண்டை

ப்ரதிமா

புத்தாடையும் பட்டாசும் சிலருக்குக் கொண்டாட்டம் என்றால் இனிக்க மணக்கச் சுவைக்கும் பலகாரங்கள் சிலருக்குத் தீபாவளியின் கொண்டாட்டத்தை நிறைவுசெய்யும். விற்கிற விலைக்கு அளந்துதான் கடையில் பலகாரங்களை வாங்க முடியும் என்ற கவலை சிலருக்கு என்றால் இன்னும் சிலருக்கோ வீட்டிலேயே பலகாரம் செய்ய பதமான பக்குவம் தெரியாதே என்ற கவலை. வீட்டிலேயே பலகாரம் செய்வதால் குறைவான செலவில் நிறைய பலகாரங்களைச் செய்து சுவைக்கலாம் என்று சொல்வதோடு அவற்றில் சிலவற்றைச் செய்யவும் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜ புஷ்பா.

கெட்டி உருண்டை

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு - 1 கப்

துருவிய வெல்லம் - முக்கால் கப்

தேங்காய்ப் பல் – அரை மூடி

பொட்டுக் கடலை - 3 டீஸ்பூன்

எள்- ஒன்றரை டீஸ்பூன்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பயறை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்ப் பல்லைச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். பின் எள், பொட்டுக்கடலை இரண்டையும் வறுத்துக்கொள்ளுங்கள். இவற்றை மாவில் கொட்டிக் கிளறுங்கள். வெல்லத்தைக் கெட்டிப் பாகாகக் காய்ச்சி, மாவில் ஊற்றிக் கிளறுங்கள். சூடு இருக்கும்போதே அரிசி மாவைக் கையில் தொட்டுக்கொண்டு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

SCROLL FOR NEXT