சமையலறை

நித்தம் நித்தம் சத்துணவு! - குதிரைவாலி கொழுக்கட்டை

இரா.கார்த்திகேயன்

என்னென்ன தேவை?

தேங்காய் - 1

குதிரைவாலி அரிசி – 2 கப்

கசகசா – 2 டீஸ்பூன்

முந்திரி - 10

வெல்லம் அல்லது கருப்பட்டி – கால் கிலோ

ஏலக்காய் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

குதிரைவாலி அரிசி, கசகசா இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி, அதனுடன் ஏலக்காய் சேர்த்துக் கெட்டியாகப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அவரவருக்குத்  தேவையான அளவு வெல்லம் அல்லது கருப்பட்டியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊறவைத்த குதிரைவாலி, கசகசாவுடன் முந்திரிப் பருப்பையும் சேர்த்து அரைத்துச்  சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். அவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்க வேண்டும். தேங்காய்ப் பாலை நேரடியாகக் கொதிக்கவைக்காமல், ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீருக்குள் வைத்து மிதமாகச் சூடானதும் வேகவைத்த உருண்டைகளைப் போட்டுப் பரிமாறலாம்.

SCROLL FOR NEXT