சமையலறை

புதுச் சுவை புரோக்கோலி! - நெய்ச் சோறு

இரா.கார்த்திகேயன்

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - கால் கிலோ

புரோக்கோலி - கால் கிலோ

நெய் - 100 கிராம்

கேரட் - 2

பீன்ஸ் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி – பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

பிரிஞ்சி இலை - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3

எப்படிச் செய்வது?

பிரியாணி அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் நெய் ஊற்றிக் காய்ந்தபின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு நறுக்கிவைத்துள்ள பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள்.

பிறகு நறுக்கிவைத்துள்ள புரோக்கோலி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டுப் புரட்டியபின், பாசுமதி அரிசியையும் தேவையான அளவு உப்பையும் சேருங்கள். அரிசியின் அளவுக்கு அதே அளவு கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடிவிடுங்கள். ஒரு விசில் வந்தவுடன் இறக்கிவிட வேண்டும்.

SCROLL FOR NEXT