சமையலறை

குளிருக்கு இதமான கருணை - அவியல்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

நறுக்கிய கருணைக் கிழங்கு – அரை கிலோ

தேங்காய் - அரைமூடி

சீரகம் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 6

உப்பு – தேவைக்கு

மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை

கெட்டித் தயிர் – கால் கிலோ

தேங்காய் எண்ணெய் – 100 கிராம்

எப்படிச் செய்வது?

கருணைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளுங்கள். துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதைக் கடைந்த தயிரில் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.

வேகவைத்த கருணைக் கிழங்கில் தயிர்க் கலவையைச் சேர்த்து அடுப்பில் வையுங்கள். ஒரு கொதிவிட்டு  தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொட்டி இறக்குங்கள்.

SCROLL FOR NEXT