சமையலறை

அலங்கரித்துச் சாப்பிடலாம்! - சூரியகாந்தி பப்பாளி  

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பப்பாளிப் பழம் – 1

கலர் சுகர் உருண்டைகள் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேன் – சிறிது

கறுப்பு திராட்சை - தேவைக்கு

எப்படிச் செய்வது?

பப்பாளியைத் தோல்சீவி, பூவின் இதழைப் போல முனை கூர்மையாக இருக்கும்படி நீளமான துண்டுகளாக அரிந்துகொள்ளுங்கள். ஒன்பது துண்டுகள் வரை ஒரு பூவுக்கு நறுக்கிக்கொள்ளலாம். நறுக்கிய துண்டுகளைத் தேனில் முக்கியெடுங்கள். பப்பாளியின் கூர்மையான நுனியில் கலர் உருண்டைகளைத் தூவிப் பத்து நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுங்கள். தட்டில் இந்தப் பப்பாளித் துண்டுகளைச் சூரியகாந்தியைப் போல் வைத்து நடுவில் கறுப்புத் திராட்சையை வையுங்கள்.

SCROLL FOR NEXT