சமையலறை

நித்தம் நித்தம் சத்துணவு! - சீரகப் பொடி சாதம்

இரா.கார்த்திகேயன்

என்னென்ன தேவை?

பாலிஷ் செய்யப்படாத பொன்னி அரிசி – கால் கிலோ

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு, உளுந்து, கடுகு - தலா ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

நெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசியை வேகவைத்து, உதிரியாக வடித்துக்கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து, சாதத்தில் கொட்ட வேண்டும். பிறகு அம்மியில் அரைத்துப் பொடியாக வைத்துள்ள சீரகப் பொடி, உப்பு, 2 ஸ்பூன் நெய் சேர்த்து  சாதத்தை நன்றாகக் கலந்து பரிமாறுங்கள். இந்தச் சீரகப் பொடி சாதம், உடல் சூட்டைக் குறைக்கும்.

SCROLL FOR NEXT