சமையலறை

புதுச் சுவை புரோக்கோலி! - வடை

இரா.கார்த்திகேயன்

என்னென்ன தேவை?

பட்டாணி அல்லது

கடலைப் பருப்பு – கால் கிலோ

பெரிய வெங்காயம் - 2

பொடியாக நறுக்கிய புரோக்கோலி - 200 கிராம்

காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 2

இஞ்சி, பூண்டு, சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பருப்பை நன்றாக ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், புரோக்கோலி துண்டுகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சோம்பு ஆகியவற்றை மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். மாவை வடைகளாகத் தட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித் தெடுங்கள்.

SCROLL FOR NEXT