என்னென்ன தேவை?
இறால் – அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
தக்காளி- 2 (நறுக்கியது)
இஞ்சி - பூண்டு நசுக்கியது - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி (அரைத்தது)
மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க: மல்லி, மிளகு – தலா ஒன்றரை டீஸ்பூன்
தாளிக்க: சீரகம், நல்லெண்ணெய், கறிவேப்பிலை, மல்லித் தழை.
எப்படிச் செய்வது?
இறால் தோலை உரித்து, அதன் மேல் கறுப்பாக இருக்கும் நரம்பு போன்ற பகுதியையும் கத்தியால் நீக்கிச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பின் இஞ்சி - பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கிப் பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
பின் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து நன்றாக வதக்கி, வேக வைத்துள்ள இறாலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, உப்பு சரிபார்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்தவுடன் அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள். மல்லித் தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.