என்னென்ன தேவை?
ராகி மாவு - 200 கிராம்
சிறிய முட்டைகோஸ் - 1
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சோம்பு, இஞ்சி விழுது - சிறிதளவு
எப்படிச் செய்வது?
முட்டைகோஸ், வெங்காயம் இரண்டை யும் மெல்லியதாகவும் நீளமாகவும் நறுக்கிக்கொள்ள வேண்டும். இதை ராகி மாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். அதனுடன் விதை நீக்கிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்குப் பிசைய வேண்டும். மாவில் சோம்பு, இஞ்சி விழுது இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்த்து, பிசைந்துவைத்த மாவைத் தட்டி இருபுறமும் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.