என்னென்ன தேவை?
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை - முக்கால் கப்
வெள்ளரி விதை - 2 டீஸ்பூன் (வறுத்தது)
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலை மாவில் தண்ணீர் விட்டுத் தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக் கொள்ளுங்கள். விரும்பினால் கலர் சேர்த்துக்கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பூந்திக் கரண்டியில் மாவை ஊற்றி மற்றொரு கரண்டியால் தட்டினால் முத்து முத்தாக
எண்ணெய்யில் விழும். பூந்தியை முறுகலாக வேக விடாமல் பாதி வெந்ததும் எடுத்துவிடுங்கள். கையால் நசுக்கிப் பார்த்தால் நசுங்க வேண்டும். அடுத்தமுறை மாவை ஊற்றும் முன் கரண்டியைக் கழுவிக்கொள்ளுங்கள். பூந்தியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரையில் அரை கப் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவைத்தால் பாகு பதம் வரும். அதில் நெய், வெள்ளரி விதை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த பூந்தியையும் சேர்த்துக் கிளறி இறக்கி 15 நிமிடம் மூடிவையுங்கள். மிதமான சூட்டில் கையில் நெய்யைத் தடவிக்கொண்டு விரும்பிய அளவில் லட்டு பிடிக்கலாம். விரும்பினால் முந்திரி, திராட்சையைச் சேர்த்துக்கொள்ளலாம்.