என்னென்ன தேவை?
உளுந்து – 1 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
ஃபுட் கலர் - சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுந்தை அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவைவிடக் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அதில் உப்பு, ஃபுட் கலர், அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளுங்கள். சர்க்கரையில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சி இறக்குங்கள். அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேருங்கள்.
தடிமனான பாலித்தீன் பை அல்லது பால் கவரின் ஒரு முனையில் சிறு ஓட்டையைப் போட்டு அதில் மாவை நிரப்பி, எண்ணெய்யில் விரும்பிய வடிவத்தில் பிழிந்து இருபுறமும் வேகவையுங்கள். வெந்ததும் அவற்றைச் சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாக அழுத்தி 2 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான மினி ஜாங்கிரி தயார்.