சமையலறை

புதுச் சுவை புரோக்கோலி! - வறுவல்

இரா.கார்த்திகேயன்

என்னென்ன தேவை?

புரோக்கோலி - கால் கிலோ

பெரிய வெங்காயம் - 2

கரம் மசாலாத் தூள் - 2 டீஸ்பூன்

பிரியாணி மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள், பட்டை, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, எண்ணெய், தனியாத் தூள் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தபின் பட்டை, நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, கரம் மசாலாப் பொடி, பிரியாணித் தூள் இரண்டையும் போட்டுச் சிவக்க வறுத்தபின் பெரிய துண்டுகளாக நறுக்கிய புரோக்கோலியைப் போட்டு உப்பு சேர்த்துக் கிளறுங்கள். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, மூடிவைத்து வேகவிட வேண்டும். பாதி வெந்த நிலையில் தனியாத் தூள், மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்துத் தண்ணீர் சுண்டும்வரை  வேகவையுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

SCROLL FOR NEXT