சமையலறை

குளிருக்கு இதமான கருணை - அடை

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கருணைக் கிழங்கு – 100 கிராம்

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 100 கிராம்

பச்சரிசி – 150 கிராம்

சிவப்பு மிளகாய் – 10

உப்பு, பெருங்காயத் தூள் – தேவையான அளவு

மல்லித்தழை, கறிவேப்பிலை -  சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகள், அரிசி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை அரை மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.  அரைத்த கலவையில்  கருணைக் கிழங்குத் துருவல், பெருங்காய்த் தூள், மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவிடுங்கள். அடி கனமான தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு மாவை அடையாக ஊற்றிச் சிவக்க வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT