என்னென்ன தேவை?
வாழைப்பழம் – நான்கு
கொய்யா – 1
அத்திபழம் – 2
செர்ரி - அலங்கரிக்கத் தேவையான அளவு
சாக்கோ சிப்ஸ் - ஒரு டீஸ்பூன்
நீளமான லாலிபாப் குச்சிகள் – நான்கு
சர்க்கரைப்பாகு - ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாழைப்பழத்தைத் தோலுரித்து, கீழ்ப்பகுதியில் கால் பங்கு வெட்டியெடுத்துவிடுங்கள். எல்லாப் பழங்களையும் இப்படிச் செய்து அவற்றின் மேல் சர்க்கரைப் பாகைத் தடவுங்கள். கொய்யாவை வட்டமாக அரிந்துகொள்ளுங்கள். அத்திப் பழத்தைத் தோல்நீக்கி, திலகம் மாதிரி அரிந்துகொள்ளுங்கள். லாலிபாப் குச்சியில் முதலில் வாழைப்பழத்தைச் செருகுங்கள். சாக்கோ சிப்ஸைக் கண்போல் வைத்து, வாய்ப் பகுதிக்கு அரிந்த செர்ரியை வைத்து அலங்கரியுங்கள். அதன் மேல் கொய்யாவைச் செருகி அதற்கும் மேல் அத்திப் பழத்தைச் செருகிப் பரிமாறுங்கள்.