சமையலறை

பூண்டுச் சட்னி

பி.டி.ரவிச்சந்திரன்

என்னென்ன தேவை?

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 25 பல்

காய்ந்த மிளகாய் - 7

கடுகு - அரை ஸ்பூன்

உளுந்து - அரை ஸ்பூன்

புளி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். பிறகு காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவிடுங்கள். ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து போட்டுத் தாளித்து, அரைத்துவைத்த கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்குங்கள்.

SCROLL FOR NEXT