சமையலறை

குளிருக்கு இதமான கருணை - வறுவல்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிய கருணைக் கிழங்கு – அரை கிலோ

மாங்காய்ப் பொடி, உப்பு – தலா 1 டீஸ்பூன்

அரிசி மாவு – 4 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

பெருங்காயத் தூள், மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கருணைக் கிழங்குத் துண்டுகளில் உப்பு, மாங்காய்ப் பொடி, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு  பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்மேல் லேசாக நீர் தெளித்துக்கொள்ளுங்கள். பிறகு சூடான எண்ணெய்யில் இவற்றைப் பொரித்தெடுத்துக்கொள்ளுங்கள். வறுத்தெடுத்தவற்றின் மீது மிளகாய்ப் பொடி, பெருங்காய்த் தூள்  தூவினால் மொறுமொறுப்பான வறுவல் தயார்.

SCROLL FOR NEXT