என்னென்ன தேவை?
பச்சைப் பட்டாணி – 1 கப்
புளிக்காத கெட்டித் தயிர் – 1 கப்
பேரிச்சை, பாதாம் – தலா 4
வெங்காயம் – 1
உப்பு – ருசிக்கு
மிளகுப் பொடி – 1 டீஸ்பூன்
ஓரிகானோ – அரை டீஸ்பூன்
குங்குமப்பூ- 1 சிட்டிகை
எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பை இரவே ஊறவைத்து அடுத்த நாள் காலை தோலுரித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் இரண்டு கப் தண்ணீர் வைத்து பாதாம், பட்டாணி, அரிந்த வெங்காயம் போட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்துத் தண்ணீர் வடித்து எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிர், அரைத்த விழுது, உப்பு, ஓரிகானோ, மிளகுப் பொடி, பொடியாக அரிந்த பேரிச்சை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். மேலே குங்குமப்பூ தூவி அலங்கரியுங்கள். இதை ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றின் மேல் தடவிச் சாப்பிடலாம். பச்சைப் பட்டாணிக்குப் பதில் கறுப்பு கொண்டைக்கடலையைச் சேர்த்தும் செய்யலாம்.