சமையலறை

கத்தரி விருந்து: புலுசு பச்சடி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பெரிய கத்தரிக்காய் – 1

பச்சை மிளகாய் – 3

கொத்தமல்லி – ஒரு கொத்து

உப்பு – தேவைக்கு

புளித் தண்ணீர் – 1 கப்

தாளிக்க

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

மிளகாய் – 2

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எப்படிச் செய்வது?

கத்தரிக்காயில் எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து நன்றாகச் சுட்டெடுங்கள். பிறகு கத்தரிக்காயின் தோலை உரித்து உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.  புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு புளித் தண்ணீரில் கத்தரிக்காய் விழுதைச் சேர்த்துப் பிசையுங்கள்.  அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். தாளிக்கக் கொடுத்த பொருட்களை எண்ணெய் ஊற்றித்  தாளித்து அதனுடன்  இந்தக் கலவையைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிவிட்டு இறக்கினால் கத்தரிக்காய் புலுசு பச்சடி தயார்.

SCROLL FOR NEXT